உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு கிருஷ்ண பக்தியை வழங்குவதற்காக சுவிஸ், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி, அமெரிக்கா, கனடா, இந்தியா, மலேசியா, இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வதியும் கிருஷ்ண பக்தர்களாகிய நாம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவினால் ஆரம்பிக்கப்பட்ட அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் வழியில் செல்வதற்காக கடந்த 05-08-2006 சனிக்கிழமை பிரான்ஸ் ஸ்ரீ ஸ்ரீ ராதா பாரிஸ் ஈஸ்வரர் ஆலயத்தில் ஒன்றுகூடி அகில உலக தமிழ் ஸ்ரீ கிருஷ்ண பக்திக்கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கழகத்தை உருவாக்கியுள்ளோம். எமது கழகத்தின் செயற்பாடுகளாக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு கிருஷ்ண பக்தியை வழங்கவும் இலங்கையில் கிருஷ்ண ஆலயங்களை அமைக்கவும் முடிவுசெய்துள்ளோம்.
இக்கழகம், வைஷ்ணவ வழக்கங்களை முன் வைத்து புராதன வேத நூல்களின் அடிப்படையில் பகவான் கிருஷ்ணரினால் உபதேசிக்கப்பட்ட பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலிருந்தும் ஆழ்வார்கள், ஸ்ரீ ராமானுஜர், தென்னிந்திய ஆச்சாரியார், மத்வர் (அனந்ததீர்த்தர்) அவர்கள் வழியில் இன்று ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதா அவர்களினால் எடுத்துக்காட்டிய பக்திமய சேவையை எடுத்துக்காட்டுகின்றது.